வாலிபரை கத்தியால் குத்திய ஐ.டி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மாந்தாங்கல் மோட்டூர் பகுதியில் தினேஷ்(32) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவியும் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் என்பவரும் ஐடி நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சத்தியசீலன் தினேஷின் வீட்டிற்கு சென்று உங்களது மனைவியிடம் பேச வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு எனது மனைவியிடம் நீ பேசக்கூடாது என தினேஷ் கூறியதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த சத்தியசீலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷின் தோள்பட்டை, தலை ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் உனது குடும்பத்தையே கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு சத்தியசீலன் அங்கிருந்து சென்றார். இதனை அடுத்து காயமடைந்த தினேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சத்தியசீலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.