Categories
மாநில செய்திகள்

எனது முடிவில் மாற்றமில்லை… ரஜினி திட்டவட்ட அறிவிப்பு…!!!

நான் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்கிய வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் ரஜினி தனது உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதனால் சென்னையில் நேற்று ரஜினி ரசிகர்கள் மக்கள் மன்றம் சார்பாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது பற்றி ரஜினி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அரசியல் குறித்தே எனது முடிவை ஏற்கனவே அறிவித்து விட்டேன். இருந்தாலும் பல நான் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

இதுதொடர்பாக சென்னையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். தலைமையின் உத்தரவை மீறி அவர்கள் நிகழ்ச்சி நடத்தியது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் அரசியலுக்கு வர முடியாத காரணங்கள் என்னவென்று ஏற்கனவே கூறி விட்டேன். இதற்குப் பிறகு நான் அரசியலுக்கு வரவேண்டும் என இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்கிய வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |