நடிகை வனிதா தன்னுடைய முதல் காதல் வாழ்க்கையைப் பற்றி கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி திரைப் திரைப்படங்களில் பணியாற்றி தற்போது பிரபலமான வனிதா பிறப்பிலேயே திரை குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தை,தாய் புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர்களான விஜயகுமார், மஞ்சுளா விஜயகுமார் என்பவர்களின் மூத்த மகள் தான் வனிதா.
இவருக்கு 2 தங்கையும், ஒரு தமையனும் உள்ளனர். தங்கைகளான ஸ்ரீதேவி, பிரீத்தா தமிழ் திரைப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் . இவரது தம்பியான அருண்விஜய் தமிழ் திரைப்பட உலகில் சிறந்த நடிகர்.வனிதா தமிழ் திரைப்பட நடிகை, தயாரிப்பாளர் ,மற்றும் திரைக்கதை எழுத்தாளராக, பணியாற்றி வந்துள்ளார். தமிழ் திரையுலகில் 1995 நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தில் நடித்து திரையுலகில் தனது முதல் அடியை தொடங்கினார்.
இந்தத் திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்காமல் பெரும் தோல்வியை சந்தித்தது. தற்போது விஜய் தொலைக்காட்சியில் குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு மற்றும் 2019ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
2000ம் ஆண்டில் நடிகர் ஆனந்த் என்னும் திரைப்படத்துணை கதாபாத்திர நடிகரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இவர் ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய காதல் வாழ்க்கை பற்றி கூறிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வந்துள்ளது.