Categories
சினிமா தமிழ் சினிமா

எனது ஹேர் ஸ்டைலிஸ்ட் , மேக்கப்மேன் இவர்தான்… பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட வீடியோ…!!

பிக்பாஸ் பிரபலம் நடிகை ஷெரின் தனது பர்சனல் ஹேர் ஸ்டைலிஸ்ட் , மேக்கப்மேன் இவர்தான் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை ஷெரின் ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அறிமுகமானவர் . அடுத்ததாக ஜெயா ,ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில், கோவில்பட்டி வீரலட்சுமி , நண்பேண்டா ஆகிய திரைப்படங்களில் நடித்தார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார் . மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையே பெற்றிருந்தார்.

தனது ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி சமூகவலைத்தள பக்கத்தில் வீடியோக்களையும் தனது புதிய புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹேர் ஸ்டைலிஸ்ட் மற்றும் மேக்கப்மேன் இவர்தான் என தன் செல்லப்பிராணியை கூறியுள்ளார். அவரின்  தலைமுடியை அவரது பூனை  வாரிவிடும் நகைச்சுவையான வீடியோவை வெளியிட்டுள்ளார் .

Categories

Tech |