நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இணைந்து நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களான விஷால் மற்றும் ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் டைட்டில் ‘எனிமி’ என்ற அறிவிப்பை நடிகர் விஷால் மற்றும் நடிகர் ஆர்யா இருவரும் ட்விட்டரில் வெளியிட்டனர். இந்த டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் இந்த திரைப்படத்தில் எதிரிகளாக நடித்துள்ளனர் .மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த திரைப்படத்தில் இணைந்திருப்பதால் ரசிகர்களிடையே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.