Categories
மாநில செய்திகள்

என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு ! 

நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெய்வேலி லிங்கனைட் காப்பரேஷன் லிமிடேட் என்று அழைக்கப்படும் என்எல்சி அனல் மின் நிலையம் தென்னிந்தியாவில் உள்ள பெரிய அனல் மின் நிலையம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் வருடத்திற்கு 30 மில்லியன் டன் லிக்னைட் எடுக்கப்படுகிறது. 

அதேபோல் 51 காற்றாலை மூலம் 1.50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சோலார் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தமாக அங்கு 4431 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிலையத்தில் இருக்கும் முதலாவது அனல் மின் நிலையத்தை மட்டும் மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

காரணங்கள் 

பல வருடமாக ஆயுட்காலம் முடிந்து இயங்கி வருவதால் இதை மூடுவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. 2022க்குள் அனல் மின் நிலைய யூனிட்டை படிப்படியாக மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.  ஒரு அனல் மின் நிலையத்தின் ஆயுட்காலம் 45 ஆண்டுகால ஆகும். ஆனால் இந்த அனல் மின் நிலையம் 1945ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதால், ஆயுட்காலம் முடிந்தும் 4 வருடங்களாக செயல்பட்டு வந்தது. 

இதனால் அதிக அளவில் மாசு ஏற்படுவதாகவும் கழிவுகள் அதிகம் உருவாவதாகவும் புகார் வந்தது. மேலும் மின் உற்பத்தியும் குறைத்துவிட்டது. முதலாவது அனல் மின் நிலையத்தில் ஒரு நாளைக்கு 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது என குறிப்பிடப்படுகிறது. இந்த அனல் மின் நிலையம் விரைவில் மூடப்படுகிறது. 

Categories

Tech |