எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி என்எல்சி நிறுவனம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, என்எல்சி நிறுவனம் ஜம்புலிங்க முதலியாரின் முயற்சியாலும் நெய்வேலி மக்களின் நாட்டுப்பற்ராலும் மற்றும் கடின உழைப்பாலும் உருவாக்கப்பட்டதாகும். இந்த நிறுவனம் 1956 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் என்எல்சி நிறுவனம் தனது மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக சுமார் 12 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு 23 லட்சம் ரூபாயும், வீட்டு மனைகளுக்கு, ஊரகப் பகுதிகளில் சென்ட்டுக்கு ரூ.40,000, நகரப் பகுதிகளில் ரூ75,000 வழங்கப்படும். மறு குடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனையில், 1,000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் நிலம் வழங்கியவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான வேலை அல்லது அதற்கு பதிலாக 10 லிருந்து 15 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு தற்போது 50 லட்சமாக உள்ளது. .இன்னும் இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 3 லட்சமாவதுஅதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில் அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கு இவ்வளவு குறைந்த தொகையை கொடுப்பது நியாயமல்ல. ஏற்கனவே என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய பலர் தற்போது பணி நிறைவு பெற்றுவிட்டனர். மேலும் இரண்டாம் கட்ட பணிக்காக நிலம் வழங்கியவர்களுக்கு என்எல்சியில் வேலை வழங்கப்பட்டுள்ளது என்னவோ உண்மைதான். ஆனால் நிரந்தர வேலை எதுவும் வழங்கப்படவில்லை ஒப்பந்த அடிப்படையிலேயே அவர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே நிலம் வழங்குபவர்களின் மீது கொஞ்சமாவது திமுக அரசு கரிசனம் காட்ட வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.”. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.