தேசியப் பங்குச்சந்தையின் ரகசிய தரவுகளை பகிர்ந்த குற்றச்சாட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட, என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை மார்ச் 6ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்தது.
இந்நிலையில் என்எஸ்இ முறைகேடு வழக்கில் திடீர் திருப்பமாக சென்னை சீதம்மாள் காலனி எக்ஸ்டென்ஷனில் உள்ள ஒரு வீட்டை ஆனந்த் சுப்ரமணியத்தின் மனைவி சுனிதா ஆனந்திற்கு, சித்ரா ராமகிருஷ்ணா(2011) விற்றுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி சித்ராவின் பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு குடியிருப்பில் ஆனந்த் தங்கி இருந்தார் என்றும் 11 வருடங்களுக்கு பிறகு அவரது மனைவிக்கு விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரூபாய் 15 கோடி மதிப்பில் வீடு ஒன்றை ஆனந்த் கட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.