தங்க கடத்தல் வழக்கில் NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் 30 கிலோ தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா மற்றும் சந்தீப் பெங்களுருவில் வைத்து NIA அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரளா அழைத்து வரப்பட்டனர். அவரிடம் NIA அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில் தற்போது ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் NIA சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இதற்கு அடுத்தபடியாக கொரோனா தடுப்பு மையத்திற்கு தான் இவர்கள் இருவரும் அழைத்து செல்லப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. பரிசோதனை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக NIA திட்டமிட்டு இருக்கின்றது. தற்போது ஆஜர்படுத்தப்பட்ட சந்தீப்பு மற்றும் ஸ்வப்னா மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு உள்ளார்கள்.