நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலும் பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தேசிய திறந்த நிலைப் பள்ளி கல்வி நிறுவனமும் ( என்ஐஓஎஸ்) பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. மதிப்பெண் மதிப்பீடு நடைமுறை மூலம் மாணவர்களின் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும். இந்த நடைமுறை விரைவில் அறிவிக்கப்படும். மதிப்பெண் மதிப்பீடு நடைமுறையில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு கொரோனா நிலைமை சீரடைந்த பிறகு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.