Categories
சினிமா தமிழ் சினிமா

என்கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்கலாம்… விஜய்- தோனி சந்திப்பு… புலம்பும் விக்னேஷ் சிவன்…!!!

விஜய் தோனி சந்திப்பு குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இன்று பிரபல கிரிக்கெட் வீரர் தோனி பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து படக்குழுவினர்களை சந்தித்தார். மேலும் விஜய், தோனி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் விஜய், தோனி இருவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது அவரின் இந்த புகைப்படத்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரு வார்த்த சொல்லிருக்கலாம். இப்போது வயிற்று வெப்பநிலை 274 டிகிரி செல்சியஸ்க்கு போய்விட்டது. நெல்சன் திலீப்குமார் அட்லீஸ்ட் நான் விஜய், தோனியுடன் இருப்பது போன்று போட்டோஷாப் செய்தாவது எனக்கு அனுப்பு’ என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த டுவீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |