செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜீயிடம், அதிமுக தோல்விக்கு வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கொடுத்தது தான் காரணம் என கருணாஸ் தெரிவித்த கருத்துக்கு எங்கள் தலைவர்களிடம் கேளுங்கள் என செல்லூர் ராஜீ பதில் அளித்தார். வருகின்ற 9ஆம் தேதி 5 மாவட்டங்களிலும் மாவட்ட வாரியாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
அந்த பணியை மதுரை மாநகர் மாவட்ட கழகம், மற்ற மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.மாண்புமிகு அம்மா அவர்கள் தான் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சொன்னதுபோல் சட்டப்போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் நீதி பெற்று உச்ச நீதிமன்றம் முதலில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம். படிப்படியாக 152 உயர்த்தலாம் என்று பெற்றவர் புரட்சித்தலைவி அம்மா உடைய அரசு,
அம்மா ஆட்சியில் இருக்கும்போது 2005இல் பெற்றார்கள். ஆனால் கடைசியில் பார்த்தீர்களென்றால் ஆட்சி மாற்றம் வந்தது, அதில் அன்றைக்கு கேரள அரசு, சட்டமன்றத்தைக் கூட்டி உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக சட்டம் இயற்றினார்கள். அப்போது திரும்ப போய் போராட்டம் பண்ணி வரும்போது திரும்ப அதை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் இல்லை. திமுக வந்தது ஆனால் திமுக செயல்படுத்தவில்லை என தெரிவித்தார்.