Categories
பல்சுவை

என்கிட்ட வச்சிக்கிட்ட இப்படித்தான் பண்ணுவேன்!…. கோபத்தில் கொரில்லா செய்த செயல்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

கொரில்லா வகை குரங்குகளின் டிஎன்ஏ-க்கள் மனிதர்களின் டிஎன்ஏ-க்களுடன் கிட்டத்தட்ட 95-99 சதவீதம் ஒத்துப்போவதாக சில ஆய்வுகள் கூறுகிறது. மனித இனத்திற்கு நெருக்கமான இந்த உயிரினம் ஆனது மனிதர்கள் செய்யும் குறும்புகளை போன்றே பல்வேறு விஷயங்களை செய்கிறது. தன்னை தொல்லை செய்யக்கூடிய வேறு கொரில்லா குரங்கின் மேல் ஒரு கொரில்லா காரிதுப்பும் ஒரு வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த நகைச்சுவையான வீடியோ டுவிட்டரில் விலங்கினங்களின் குறும்புத் தனங்களை வெளிக்காட்டும் யோக் என்ற கணக்கு பக்கத்தில்தான் பகிரப்பட்டிருக்கிறது.

https://twitter.com/Yoda4ever/status/1586544052492636161?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1586544052492636161%7Ctwgr%5Ef52aad7e7eeb3b5ebfe677407eb2a9a38014668a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fgorilla-funny-latest-viral-video-google-trends-417378

அந்த வீடியோவில் ஒரு கொரில்லா குரங்கு தன் மார்பு பகுதியில் தனது குட்டி கொரில்லாவை அனைத்து வைத்துக்கொண்டு வாளியில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரை குனிந்து குடித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த கொரில்லாவை தொல்லை செய்ய வேறு ஒரு கொரில்லா வருகிறது. அப்போது உடனே சுதாரித்துக் கொண்ட அந்த கொரில்லா தன் வாயிலுள்ள தண்ணீரை தன்னை நெருங்கிவந்த மற்றொரு கொரில்லா குரங்கின் மூஞ்சியில் பீய்ச்சி அடிப்பது போன்று காரி துப்பிவிடுகிறது. பின் அந்த கொரில்லாகுரங்கு முகத்தை துடைத்துவிட்டு அங்கிருந்து விலகிச்செல்வதுடன் வீடியோவானது முடிவடைகிறது. இக்காட்சி பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக உள்ளது. இந்த வீடியோவானது பல்லாயிரக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும், கமெண்டுகளையும் பெற்று வைரலாகி வருகிறது.

Categories

Tech |