Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்கூட சேர்ந்து வாழ வா” கணவரின் கொடூர செயல்…. அதிகாரியின் நடவடிக்கை….!!

பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்த குற்றத்திற்காக மாநகராட்சி ஊழியரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர் .

சேலம் மாவட்டத்தில் குகை ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மாநகராட்சியில் கொசு மருந்து அடிக்கும் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். கடந்த 30-ஆம் தேதி ஏசுதாஸ், ரேவதி மீது ஆசிட் வீசியதில் அவர் உடல் வெந்து உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ரேவதி வேறு ஒருவருடன் கள்ளதொடர்பு வைத்திருந்ததாகவும், அதை கைவிடுமாறு பலமுறை கூறியும் அவர் மறுத்துவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் தெரிகின்றது.

இந்நிலையில் ரேவதியுடைய கணவர் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பலமுறை அழைத்தும் அவர் செல்லவில்லை. மேலும் கணவர் மீது ரேவதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏசுதாஸ் மனைவி மீது ஆசிட் வீசி கொலை செய்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மனைவியை கொலை செய்த ஏசுதாசை காவல்துறையினர் கைது செய்து ஆத்தூர் சிறைச்சாலையில் அடைத்தனர். இந்நிலையில் ரேவதியின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறையினர் அவரது மகன்கள் மற்றும் உறவினர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

அதன்பின் உறவினர்கள் மற்றும் மகன்கள் ரேவதியின் சடலத்தை பெற்றுக்கொண்டனர். இதனைதொடர்ந்து கொசு மருந்து அடிக்கும் எந்திரத்தில் ஒட்டியுள்ள கரும்புகையை நீக்குவதற்காக கூறி செவ்வாய்பேட்டையில் உள்ள கடையில் ஏசுதாஸ் ஆசிட் வாங்கியதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. மேலும் தலைமறைவாக இருக்கின்ற ரேவதியின் கள்ளக்காதலனை வலைவீசி தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபட்ட ஏசுதாசை பணியிடை நீக்கம் செய்ய மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |