பிரபல நடிகை ராசி கண்ணா என்ஜாயி எஞ்சாமி பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் தெருக்குரல் அறிவு மற்றும் தீ இணைந்து பாடிய பாடல் என்ஜாயி எஞ்சாமி. வித்தியாசமான இசை மற்றும் காட்சிகளுடன் தீ மற்றும் தெருக்குரல் நடிப்பில் உருவான இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபலங்கள் பலரும் நடனமாடிய வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகை ராஷி கண்ணா இந்த பாடலுக்கு தனது நடன பயிற்சியாளருடன் இணைந்து அசத்தலாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவிற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.