பின்னணி பாடகர்கள் அறிவு, தீ இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி ஆடியுள்ள என்ஜாய் எஞ்சாமி பாடல் தான் பட்டி தொட்டி எல்லாம் தற்போது பரவிக்கொண்டிருக்கிறது. கடந்த மார்ச் 7ஆம் தேதி யூடியூப் தளத்தில் இந்த பாடல் வெளியானது. அதன்பிறகு 28 நாட்களில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்தப் பாட்டிற்கு அடிமை.
வெளிநாட்டு ஆல்பம் பாடல் களைப் போல அருமையான மேக்கிங்கில் நம்ம ஊரு கிராமம் மற்றும் மண் மனத்தை சேர்த்த இந்தப் பாடலைக் கேட்பவர்கள் அடுத்த நொடியே இருப்பது போல அமைந்துள்ளது. இயக்குனர் அமித் கிருஷ்ணா இயக்கத்தில் ஆல்பம் பாடல் மிகவும் அற்புதமாக உருவாகியுள்ளது. இது யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஒரு மாதமாக சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்திலும் கேட்கும் ஒரே பாடல் குக்கூ குக்கூ தான். அந்த அளவுக்கு பாடல் பட்டிதொட்டி எங்கும் செம வைரல்