தமிழகத்தில் உள்ள 431 இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கும் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான கலந்தாய்வு கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி தேதி முதல் பொது கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் நீட் தேர்வு முடி வெளியாகவதால் பொது கலந்தாய்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்மொழி அறிவித்திருந்தார். இந்நிலையில் நீட் தேர்வு முடிவு குறித்து அறிவிப்பை தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதன்படி பார்க்கும்போது இன்ஜினியரிங் பொது கலந்தாய்வு இன்னும் இரண்டு வாரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறிந்து உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியது, நீட் தேர்வு முடிவு வெளியான 2 நாட்களுக்கு பிறகு இன்ஜினியரிங் பொது கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவித்தார். அதன்படி இன்ஜினியரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வருகின்ற செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டு மாதத்திற்கு தரவரிசை பட்டியலின் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டு விருப்ப இடங்களை தேர்வு செய்து, தற்காலிக இடங்களை ஒதுக்குவது, அதை உறுதி செய்த பிறகு இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்குவது, கல்லூரிகளில் சேர்வது என கலந்தாய்வு நடக்க இருக்கிறது. மேலும் துணை கலந்தாய்வு நடத்தப்படும். அதன்படி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்துக்கு மேல் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.