நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரைக்கால் பகுதியில் வினோபா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்து கொண்டிருந்தபோது குகன் என்ற மீனவர் என்ஜினில் சிக்கிய வலையை எடுப்பதற்காக கடலில் குதித்துள்ளார்.
அப்போது படகில் பொருத்தப்பட்டிருந்த காத்தாடி கருவி அவருடைய காலை வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குகனை கோழியக்கரை கடற்கரைக்கு மீனவர்கள் படகுமூலம் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குகனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து காவல் துறையினருக்கும் மின்துறை அலுவலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.