Categories
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் முதலாம் ஆண்டிற்கு வகுப்புகள் எப்போது தொடக்கம்….? அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு….!!!!

பொறியியல் படிப்புக்கான பொதுப் பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வானது செப்டம்பர் பத்தாம் தேதி அன்று தொடங்கியது. மொத்தமாக இதுவரை இன்ஜினியரிங் படிப்புக்காக 58 ஆயிரத்து 37 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளது. இதற்கிடையில் கலந்தாய்வின் முதல் கட்டத்தில் நான்காவது சுற்று கலந்தாய்வுக்கு 61 ஆயிரத்து 771 பேருக்கு அழைப்பு விட்டதில் பங்கேற்று விருப்ப இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 29, 30, 31 ஆகிய தேதிகளில் அவகாசம் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து விருப்ப இடங்களை தேர்வு செய்த 36057 மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை குழு வெளியிட்டது. இதனை உறுதி செய்வதற்கு வருகிற பத்தாம் தேதி வரை மாணவ மாணவிகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் 28ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |