Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ஜினீயர் வீட்டில்… “உலோக சிலை, வெள்ளி பொருள் திருட்டு”… போலீசார் வலைவீச்சு…!!

இன்ஜினியர் வீட்டில் உலோக சிலை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாகை மாவட்டம் நாகூர் அருகில் வடகடம்பகுடி அக்ரஹாரம் தெருவில் கட்டிட என்ஜினீயரான அசோகன்(51)  என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 13 ஆம் தேதி தனது பெற்றோரின் உடல் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டு பின் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அசோகன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பூஜை அறையில் இருந்த 1/2 பவுன் சங்கிலி, 25 கிராம் எடை கொண்ட இரண்டு வெள்ளி குத்து விளக்குகள், ஒரு கிலோ எடையுள்ள உலோகத்தாலான அம்மன் சிலை ஆகிய பொருள்கள் காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து அசோகன் நாகூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இப்புகாரின் பேரில் நாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் அசோகன் வீட்டிற்கு வந்து பார்வையிட்டு திருட்டுப்போன பொருள்களின் மதிப்பு ரூபாய் 50,000 இருக்கும் என்று கூறியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |