Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்”…. 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட ரயில்….!!!!!

சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் கோளாறு காரணமாக நடுவழியில் நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.

சென்னையிலிருந்து கடலூர் வழியாக தினசரி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலானது இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டது. பின்னர் காலை 10:48 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அதன் பின்னர் காலை 10.53 பணிக்கு புறப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலே மின்சார எஞ்சின் பழுதாகி நடுவழியில் நின்றது.

இதைத்தொடர்ந்து ரயில்வே அதிகாரிகளுக்கு இன்ஜின் டிரைவர் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இன்ஜினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்ட நிலையில் மதியம் 15 மணிக்கு தான் கடலூர் துறைமுகம் சந்திப்பு நிறுவனத்தில் இருந்து திருச்சி நோக்கி புறப்பட்டது. இதனால் ரயில் சுமார் 2 1/4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Categories

Tech |