சமந்தா நடிக்கும் யாசோதா திரைப்படத்தை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது ஸ்ரீதேவி மூவிஸ் தயாரிக்கும் யசோதா திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் செட் ஒன்று உருவாகியுள்ளது. இப்படத்தை ஹரி-ஹரிஷ் இருவரும் இணைந்து இயக்குகின்றனர். இவர்கள் இப்ப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகின்றனர். இப்படத்தில் முன்னணி நடிகர்களான வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இத்திரைப்படத்திற்காக இயக்குனர் அசோக்கின் ஆலோசனைப்படி 3 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட அரங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் சிவலெங்கா கூறியுள்ளதாவது, எங்களின் பிரமாண்ட திரைப்படமான யசோதா 30 முதல் 40 சதவீதம் 5 ஸ்டார் ஹோட்டலில் தான் படப்பிடிப்பு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர ஹோட்டலில், 7 ஸ்டார் ஹோட்டலுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் உள்ளன. இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரங்களுக்கான படப்பிடிப்பு பிப்ரவரி 3ல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் முழுபடப்பிடிப்பானது ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கின்றது. கலை இயக்குனர் அசோக் இப்படத்தின் பிரமாண்ட செட்டை உருவாக்கியுள்ளார். இது அவரின் பெருமையை கூறும் வகையில் இருக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர் குறிப்பிடத்தக்கது.