Categories
தேசிய செய்திகள்

என்னடா அதிசயம்….! ரூ.100 கேட்டால் ரூ.500 கொடுக்கும் ATM…. லட்சக்கணக்கில் பறிகொடுத்த வங்கி….!!!!

உத்திர பிரதேசம் மாநிலம் அலிகர் நகரத்தில் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக லட்சக்கணக்கில் பணம் நஷ்டமாகி உள்ளது. அதாவது ஏடிஎம் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால் 18 பேர் வரை பணம் எடுத்த போது 100 ரூபாய் எடுக்க முயன்றவர்களுக்கு 500 ரூபாயை கொடுத்துள்ளது. இதன் மூலமாக ஒரு லட்சத்து 96 ஆயிரம் பணம் நஷ்டமாகி உள்ளது.

இதனை தொடர்ந்து ஒரு வாடிக்கையாளர் இந்த ஏடிஎம் இயந்திரத்தின் இயந்திர கோளாறு குறித்து வங்கியில் புகார் அளித்ததையடுத்து அங்கு விரைந்து அதிகாரிகள் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இதில் ஐந்து பேரை அதிகாரிகள் கண்டறிந்தனர். அந்த இயந்திரத்தில் 500 மட்டும் 2000 நோட்டுகள் மட்டுமே நிரப்பப்பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் எடுத்துச் சென்ற அதிக தொகையை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் தீவிரப் படுத்தி உள்ளனர்.

Categories

Tech |