Categories
தேசிய செய்திகள்

என்னடா…! இங்க இருந்த ஸ்கூலை காணோம்…. ஷாக் ஆன மாணவர்கள்….!!!!

லக்னோ மாநிலம் கோலாகஞ்ச் என்ற பகுதியில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பினார்கள். பள்ளிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அவர்கள் படித்து வந்த பள்ளியின் பெயர் மாற்றப்பட்டு தனியார் பள்ளியின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் உள்ளே சென்ற போது அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு அருகில் இருந்த மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பணி தனியார் பள்ளி ஆனது எப்படி என்று தெரியவில்லை என்று அவர்கள் புலம்புகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |