மத்திய பிரதேசத்தின் சத்தாப்பூர் மாவட்டத்தில் உள்ள கச்சார் கிராமத்தில் அடிபம்பு ஒன்றிலிருந்து ஒரே நேரத்தில் தண்ணீரும் நெருப்பும் சேர்ந்து கொப்பளித்து வெளியேறியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. கச்சார் கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக இரண்டு அடி பம்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் ஒரு அடி பம்பில் இருந்து இவ்வாறு நீரும் நெருப்பும் சேர்ந்து ஒரே நேரத்தில் வெளியேறி இருப்பதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி ஆய்வாளர்கள் பேசும்போது அடிப்பம்பில் இருந்து நீருடன் நெருப்பு வெளியேறுவது அதிசய நிகழ்வு அல்ல எனவும் இது பொதுவாக ஹைட்ரோ கார்பன் எனப்படும் மீத்தேன் வாயு வெளியேறுவதால் ஏற்படும் நிகழ்வு எனவும் தெரிவிக்கின்றனர்.
Categories