கால நிலை மாறுபாடுகள் உள்ளிட்ட காரணங்களால் 10 ஆண்டுகளில் சென்னையில் ஈசிஆர், சோழிங்கநல்லூர் பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் சல்லி, பூவரசன் பட்டி உள்ளிட்ட இடங்கள் கடலில் மூழ்கியதாக கூறியுள்ளனர். கடல் நீர்மட்ட உயர்வை குறைக்க வில்லை எனில் நிலத்தடி நீர் பாதிப்பும், டெல்டாவில் விவசாய நிலம் பாதிப்பும் இருக்கும் என எச்சரிக்கின்றனர்.
வந்தாரை வாழவைக்கும் என புகழப்படும் சென்னை, கடந்த 4 மாதமாக கொடிய பெருந்தொற்று கொரோனாவின் பாதிப்பில் சிக்கி சிதைந்துள்ளது. இதன் தாக்கத்தால் பலரும் தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது தான் கொரோனாவில் இருந்து சென்னை மீண்டு வரும் நிலையில் சென்னைக்கு செல்ல காத்திருந்தவர்களுக்கு ஆய்வாளர்களின் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.