Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னடா இது…! தலைவலி தீருவதற்குள் வயிற்று வலி…. செம டென்ஷனில் இபிஎஸ்…!!!

2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்ததால் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததற்கு எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து  பொங்கல் தொகுப்போடு கரும்பு சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வேட்டி, சேலை பிரச்சனை தற்போது எழுந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். தலைவலி தீருவதற்குள் வயிற்று வலிபோல் உள்ளது என தெரிவித்துள்ளார். வேட்டி, சேலைக்கு தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Categories

Tech |