சாம்சங் நிறுவனம் மடிக்கும் வகையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.
சாம்சங் நிறுவனம் 2020 ஆண்டுக்கான தனது முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடல்களை வருகின்ற பிப்ரவரி 11_ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா என மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதோடு கேலக்ஸி எஸ் சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது இரண்டாம் தலைமுறைக்கான , மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான கேலக்ஸி இசட் ஃப்ளிப் மாடலை அறிமுகமாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.கேலக்ஸி இசட் ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போன் கிளாம்ஷெல் வடிவமைப்பை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு கடந்த ஆண்டு அறிமுகமான மோட்டோ ரேசர் போன்று காட்சியளிக்கின்றது. இதன் டிஸ்ப்ளேவை சுற்றி பிளாஸ்டிக் பெசல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங்கின் முந்தைய மாடலான கேலக்ஸி ஃபோல்டு மாடலில் இருந்த ஹின்ஜ் அமைப்பை தற்போது மேம்படுத்தி புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட் போனில் கொடுத்துள்ளது. கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவிலும் ஸ்கிரீனினை பாதுகாக்கும் மெல்லிய ஸ்கிரீன் ப்ரோடெக்டர் முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சம் :
கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இது புல் ஹெச்.டி. ரெசல்யூஷனை சப்போர்ட் செய்யும் திறன் படைத்தது. புதிய ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ள பன்ச் ஹோல் கேமரா அமைப்பு கேலக்ஸி நோட் 10 மாடலின் முந்தைய அமைப்பு ஆகும்.
ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 1.06 இன்ச் 300×116 பிக்சல் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் உள்ள டிஸ்ப்ளே டூயல் கேமரா சென்சார்களுக்கு அடுத்த இடத்தில் இடம்பெற்றுள்ளது பொருத்தப்பட்டுள்ளது. இது சிறிய அளவிலான டிஸ்ப்ளே ஆல்வேஸ் ஆன் மோட் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகின்றது. இதில் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
இதன் பாதுகாப்புக்காக 6 கொரில்லா கிளாஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி இசட் ஃப்ளிப் ஸ்மார்ட்போனில் 15 வாட் குவிக் சார்ஜ் வசதி , குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி , கைரேகை சென்சார் வசதி ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் என தெரிகிறது.