நபர் ஒருவர் மரத்தை மேலிருந்து வெட்டும் காட்சி காணொளியாக வெளியாகியுள்ளது
நாம் அனைவரும் மரத்தை கீழே இருந்து வெட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் வெளியாகி இருக்கும் காணொளியில் மரத்தின் உச்சியில் ஒருவன் ஏறி அமர்ந்து கொண்டு பனை மரத்தை வெட்டுவது பதிவாகியுள்ளது. ரெக்ஸ் சேப்மேன் எனும் கூடைப்பந்தாட்ட வீரர் இந்த காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து கொண்டு மரத்தின் மேல் தகுதியைப் வெட்டுகின்றார்.
இதனால் அங்கும் இங்கும் மரம் அசைவதை பார்ப்பவர்களுக்கு பயம் ஏற்படும்போது அந்த நபரோ சிறிது தடுமாற்றம் இல்லாமல் மரத்தின் மீது அசையாமல் அமர்ந்துள்ளார். காணொளியை பார்த்த பலரும் மரத்தை வெட்டிய நபரை பாராட்டி வருகின்றனர். சிலர் இது ஆபத்தான செயல் என்றும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
Ever seen anyone cut a really tall palm tree?
Oh my god… https://t.co/O0sde0ZCz0
— Rex Chapman🏇🏼 (@RexChapman) September 25, 2020