அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு கல் துகள்களுடன் தையல் போட்டுள்ளனர் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆணவம் பகுதியை சேர்ந்த மதிவாணன் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதனால் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிவாணனுக்கு மருத்துவ ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்திருந்த நிலையில் அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கும்போது தையல் போட்ட பகுதியின் உள்ளே மூன்று கல் துகள்கள் இருந்துள்ளது. மதிவாணன் விபத்தில் சிக்கிய போது தரையில் கிடந்த கற்கள் காலின் உள்ளே சென்றிருந்தது. அதைக் கூட சுத்தம் செய்யாமல் மருத்துவர்கள் தையல் போட்டுள்ளனர். இந்நிலையில் இன்று மதிவாணனுக்கு தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து கற்களை அகற்றி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.