Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

“என்னடா லைன் கட்டி நிக்கிறிங்க”…. சிறுவனுடன் விளையாடும் அமைச்சர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!!

புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சிறுவர்களிடம் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. இவர் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கிறார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பெண் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இவர் நடித்த விழிப்புணர்வு குறும்படம் வீடியோ, உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சி நடனமாடியது, மகளிர் தினத்தன்று அம்மன் வேடம் காட்சியளித்தது என பல்வேறு வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் தற்போது மளிகை கடை ஒன்றில் தன்னை அமைச்சர் என நம்ப மறுக்கும் சிறுவனிடம் தான் அமைச்சர் என விளையாடும் வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிறுவனிடம் அமைச்சர் என்று கூப்பிடு யார் ஓடி வருகிறார்கள் என பார்ப்போம் என கூறிவிட்டு மறைந்து இருந்து கூப்பிட்ட உடன் ஓடிவந்து உற்சாகப்படுத்திய காட்சிகள் பதிவாகி இருக்கிறது. மேலும் சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்த அமைச்சர் திடீரென பல குழந்தைகள் திரண்டதால் “அய்யோ என்னடா லைன் கட்டி நிக்கிறீங்க என்று கூறிவிட்டு புன்னகைக்கும்” காட்சிகள் பதிவாகி இருக்கிறது.

Categories

Tech |