Categories
தேசிய செய்திகள்

என்னடா வாழக்கைன்னு தோணுது!…. லிப்டில் போகவும் பயமா இருக்கா?…. கேலி செய்த ஆளுநர் தமிழிசை….!!!!

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் “முதலில் விமானத்தில் சென்றால் பாதுகாப்பில்லை என தோன்றும். அதன்பின் காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். ஆனால் தற்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பில்லை. இதனால் என்னடா வாழ்க்கை என நினைக்க தோன்றுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து அவர் பேசினார்.

மேலும் புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு தமிழிசை சௌந்தரராஜன் பதில் கூறினார். அதாவது, அனைத்திலும் அரசியல் செய்து வந்தவர் தற்போது யானையிலும் அரசியல் செய்கிறார் என்பது தான் கவலையாக இருக்கிறது. யானை இறந்தது அனைவருக்கும் மனவருத்தம் தான். இனிமேல் வரும் காலத்தில் கோவில் யானைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என வழிமுறைகளை மேற்கொள்ளலாம். யானை லட்சுமிக்கு முன்பே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது” என்று கூறினார்.

Categories

Tech |