பனியன் நிறுவன ஊழியரை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வேல்முருகன் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார் என்பவர் சாலையை கடந்து சென்றுள்ளார். அந்த சமயம் வேல்முருகன் தனது நண்பருடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததால் தன்னை கிண்டல் செய்கிறார்கள் என நினைத்து ராஜ்குமார் அவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
மேலும் கோபமடைந்த ராஜ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேல்முருகனை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த வேல்முருகனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.