Categories
சினிமா தமிழ் சினிமா

என்னது…! “ஆயிரத்தில் ஒருவன் படத்துல ரஜினிகாந்த் இருக்காரா?”…. யாரும் பார்த்திராத புகைப்படம்….!!!

ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பிற்கு சென்ற ரஜினிகாந்த்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2010-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தை செல்வராகவன் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியிருந்தார்.

மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் 8 ஆண்டுகள் கழித்து 2018-ஆம் ஆண்டில் இருந்து தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.மேலும் ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பிற்கு ரஜினிகாந்த் ஒருநாள் நேரடியாக சென்று  பார்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |