Categories
உலக செய்திகள்

“என்னது இது..!” தன் உறுப்புகளை வெட்டி.. டாட்டூக்கள் வரைந்து.. ஏலியனாக மாறிய விசித்திர இளைஞர்..!!

பிரிட்டனில் ஒரு நபர் தன் உடல் உறுப்புகளை வெட்டி ஏலியன் போன்று முற்றிலுமாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளார். 

பிரிட்டனில் வாழும் Anthony Loffredo என்ற 32 வயது நபர் ஒருவர், தன் காதுகள், மூக்கு, உதடுகள் மற்றும் நாக்குகள் போன்ற அனைத்தையும் வெட்டி திரைப்படங்களில் காண்பிக்கப்படும் ஏலியன் போல தன்னை முற்றிலுமாக மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது விசித்திரமாகவும் மிகவும் பயங்கரமாகவும் தோற்றமளிக்கிறார்.

இவர் தனக்கு “black alien” என்று பெயர் சூட்டிக் கொண்டார். பெயருக்கு ஏற்றார் போல் கண் உட்பட தன் உடல் முழுவதையும் டாட்டூக்களால் கருப்பாக மாற்றியுள்ளார். சுமார் நான்கு வருடங்களாக தன் உருவத்தை மாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக அவர் “பிளாக் ஏலியன் ப்ராஜெக்ட்” என்று பெயர் வைத்திருக்கிறார்.

மேலும் தன் உடலில் மாற்றங்களை செய்யும் போதெல்லாம் அதன் புகைப்படங்களையும்,  வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுகிறார். இதனாலேயே இன்ஸ்டாகிராமில் 3,45,000 பேர் இவரை பின்பற்றுகிறார்கள். மேலும் Loffredo தன் அறுக்கப்பட்ட மூக்கு, இரண்டாக பிளவுபட்ட நாக்குகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு முன்பு போல் இயல்பாக பேச முடியாமல் இருக்கிறார்.

எனினும் தனது தோற்றத்தை எண்ணி பெருமையடைவதாக தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு மாறுவது தான் நீண்ட நாளாக தன் ஆசையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். Loffredo தன் தோற்றத்தை போலவே விசித்திரமானவர் தான்.

Categories

Tech |