இனி ஆன்ட்ராய்டு போன்களில் கால் ரெக்கார்டு ஆப்களை பயன்படுத்த முடியாது என்று கூகுள் நிறுவனம் தடைவிதித்துள்ளது.
ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தும் பயனாளர்கள் இனி தங்கள் செல்போன்களில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாக கால்களை ரெக்கார்ட் செய்யும் வசதியை மேற்கொள்ள முடியாது. இதற்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. மூன்றாவது தரப்பு நபர்கள் கால் ரெக்கார்டிங் தவறாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்து கால் ரெக்கார்டிங் அப்ளிகேஷன்களும் வரும் மே 11ம் தேதி முதல் தடை செய்யப்படும். தற்போது போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் மே 11-ஆம் தேதிக்கு பிறகு வேலை செய்யாது.
ஆனால் பயனாளர்கள் தங்கள் செல்போனில் உள்ள பில்ட் இன் கால் ரெக்கார்டிங் வசதியை மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் ஆண்ட்ராய்டு போன்களில் இந்த வசதி இல்லாதவர்களுக்கு மே 11-ஆம் தேதிக்கு பிறகு கால் ரெக்கார்ட் செய்ய முடியாத சூழல் ஏற்படும். ட்ரூ காலர் போன்ற ரெக்கார்டிங் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலி மூலமாக கால் ரெக்கார்டிங் செய்யப்படும்போது செல்களின் API தரவுகளை டிராக் செய்கின்றன. இதன் மூலமாக பயனாளர்களின் டேட்டா பாதுகாப்பு மற்றும் பிரைவசியானது கேள்விக்குறியாக மாறுகிறது.
பலரும் இந்த ஆப் மூலமாக தவறான செயல்களை செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாகவே கூகுள் நிறுவனம் தற்போது இதற்கு தடை விதித்துள்ளது. மேலும் ட்ரூ காலர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கும் போது” நாங்கள் ஆண்ட்ராய்டு போன்களில் உருவாக்கியுள்ள ரெக்கார்டிங் வசதியை பயன்படுத்தி பல பயனாளர்கள் பயனடைந்துள்ளனர். இந்த வசதி அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் நிலையில் API பயன்பாட்டு வாடிக்கையாளர்களின் அனுமதிபெற்று மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கூகுள் நிறுவனத்தின் புதிய விதியால் இனி கால் ரெக்கார்டிங் வசதியை தர முடியாமல் போகலாம்” எனக் கூறினார். அதன்படி இனி மே 11-ஆம் தேதிக்கு பிறகு ஆண்ட்ராய்டு போன்களில் கால் ரெகார்டிங் வசதி செயல்படாது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.