Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னது இரும்புத்தகடா… வாலிபர்கள் செய்த செயல்…சேலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு..!!

தண்டவாளத்தில் வீசப்பட்ட இரும்பு தகட்டால் சேலம் ரயில் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டடுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள கந்தம்பட்டி பகுதியில் சரக்கு ரயில் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் அங்கு வந்த 2 வாலிபர்கள் இரும்புத் தகட்டை தண்டவாளத்தில் எரிந்துவிட்டு ஓடினர். இதனையடுத்து ரயிலை இயக்கி வந்த கோபிநாத் இரும்பு தகட்டை பார்த்தவுடன் ரயிலை நிறுத்தி விட்டார். அதன்பின் ரயில்வே ஊழியர்கள் இரும்புத் தகட்டை அகற்றிய பின்னர் ரயில் புறப்பட்டது.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த சேலம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தண்டவாளத்தில் இரும்புத்தகடை வீசிய நபர்கள்
திருக்கவுண்டன்புதூரில் வசிக்கும் செல்வகணபதி, கோவிந்தராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர்கள் கட்டிட தொழிலுக்காக இரும்பு தகடை திருடியதும், ரயில் வந்ததைக் கண்டதும் அதை தூக்கி எறிந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

Categories

Tech |