தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா காசாண்ட்ரா. இவர் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களும், 3 தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளது. இந்நிலையில் ரெஜினா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், 2020ல் எனது காதல் முறிந்து போனது. அதிலிருந்து விடுபட கொஞ்ச நாட்கள் எடுத்துக் கொண்டேன். இப்போது யாரையும் காதலிக்கவில்லைம் திருமணம் பற்றிய பேச்சை எடுக்கவே மாட்டேன். வாழ்க்கையில் திருமணம் செய்து கொள்வேனோ, இல்லையோ என்பது எனக்கே தெரியாது. ஏனென்றால் சிறு வயது முதலே தனது காலில் சுயமாக வாழ்வது எப்படி என்பது பற்றி என் அம்மா என்னை பழக்கப்படுத்தி வைத்துள்ளார். எனவே வாழ்க்கையில் யாராவது வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து யோசிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.