நெல்சன் திலீப்குமார் ‘தலைவர் 169’யை இயக்குவதற்கு முன் ஒரு நிகழ்ச்சியில் ரஜினியை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தலைவர்-169 படத்தின் அதிகாரபூர்வமான தகவலை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இது மிகவும் வைரலானது. ரஜினியின் அண்ணாத்தா படத்திற்குப் பிறகு அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். தலைவர்-169க்கு அனிருத் இசையமைக்கிறார் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றிருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் அமையவில்லை.
இதனால் ரஜினிகாந்த், அவரின் அடுத்தபடம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் அமைய வேண்டும் என பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்த பொழுது நெல்சன் திலீப் குமாரின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்நிலையில் தலைவர் 169 உருவாகின்றது. இதைத் தொடர்ந்து தற்போது ரஜினியை நெல்சன் இரண்டாவது முறை இயக்குவதாக தகவல் வெளியாகி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொடக்ககாலத்தில் நெல்சன் நிகழ்ச்சிகளை இயக்கி வந்தார். அப்பொழுது ஒரு விருது வழங்கும் விழாவை இயக்கினார். அந்நிகழ்ச்சியில் விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன் பங்கேற்றிருந்தனர். இவர்கள் மூவரையும் நெல்சன் தற்போது இயக்குகிறார். இதனால் நெல்சன் திலீப்குமாருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. தற்பொழுது நெல்சன் திலீப்குமார் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு தலைவர்169-வது படம் அமையும் என கூறப்படுகின்றது.