மேற்கு வங்காள மாநிலத்தில் தேனீர் ஒரு கப் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் பிரதீம் கங்குலி என்றவர் வசித்து வருகிறார். அவர் தேநீர் கடை ஒன்று புதிதாக ஆரம்பித்துள்ளார். அவரிடம் அனைத்து வகையான தேநீர்களும் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சாக்லேட் தேநீர், வெள்ளை தேநீர், மக்காச்சோளம் தேனீர், நீல தேனீர் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன. அதில் ஜப்பானிய வெள்ளை இலை தேநீர் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதைப்பற்றி அவர் கூறும்போது, “எனது கடையில் உலகம் முழுவதிலும் உள்ள 115 வகையான தேநீர்கள் உள்ளன. ஜப்பானின் சிறப்பு சில்வர் ஊசி வெள்ளை தேநீர் ஒரு கிலோ 2.8 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. எனது கடைக்கு ஆரம்பத்தில் குறைந்த அளவு மக்களே வருகை தந்தனர். ஆனால் தற்போது அதிக அளவு மக்கள் தேநீர் குடிக்க வருகிறார்கள். இத்தகைய பிரீமியம் தேயிலைக்கு ஆயிரம் ரூபாய் செலுத்துவதை மிக உயர்ந்த விலை இல்லை என்று மக்கள் புரிந்து கொள்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.