Categories
பல்சுவை

என்னது…! ஒரு குழந்தை 2 முறை பிறந்ததா….? எப்படின்னு நீங்களே பாருங்க…!!

ஒரே குழந்தை ஒரே மருத்துவமனையில் இரண்டு முறை பிறந்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா…? 2016-ஆம் ஆண்டு டெக்சாஸில் வசிக்கும் Margaret Boemer என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். வழக்கம் போல Margaret பரிசோதனைக்காக குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்த போது அந்த குழந்தையின் உடம்புக்கு வெளியே பெரிய Tumor கட்டி வளர்வது தெரியவந்தது. அந்த கட்டி வளர்ந்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து என கருதிய மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்ற முடிவெடுத்தனர். ஆனால் அந்த குழந்தை வளர்ந்து 23 வாரங்களே ஆனது.

இதனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அந்த குழந்தையை வெளியே எடுத்து கட்டியை அகற்றினர். அதன் பிறகு 20 நிமிடத்திற்குள் குழந்தையை Margaret வயிற்றுக்குள் வைத்து தைத்தனர். இதனைத் தொடர்ந்து 4 வாரங்கள் கழித்து அதே குழந்தை அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. அந்த குழந்தை இரண்டு முறை பிறந்ததால் வருடத்தில் இரண்டு முறை பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.

Categories

Tech |