ஒரே ஒரு நோயாளியின் உடம்பில் இருந்து 156 சிறுநீரக கற்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த பசவராஜ் என்ற நோயாளிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதுடைய அந்த நோயாளியின் உடலை ஸ்கேன் செய்து பார்த்த போது, சிறுநீரகத்தில் நிறைய கற்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரின் உடலிலிருந்து மொத்தம் 156 சிறுநீரகக் கற்களை எடுத்துள்ளனர்.
3 மணி நேரம் லாப்ரோஸ்கோபி, எண்டோஸ்கோபிக்கு பின்னர் 156 சிறுநீரகக் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே ஒரு உடலில் இருந்து 156 சிறுநீரக கற்கள் எடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். பசவராஜ் தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி பசவராஜ்க்கு சிறுநீரகம் சிறுநீர்குழாய்க்கு பதிலாக வயிற்று அருகில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் பசவராஜ் உடலிலிருந்து 156 சிறுநீரக கற்களை எடுப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.