திருமண தம்பதிகள் தங்களுடைய திருமண போட்டோஷூட் காக சிங்ககுட்டியை மயக்கமடையச் செய்து, போட்டோஷூட் எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவமானது பாகிஸ்தான் நகரில் தலைநகரான லாகூரில் நடந்துள்ளது. திருமண போட்டோவிற்காக ஒரு சிங்கக் குட்டியை பயன்படுத்தி போட்டோஷூட் செய்தது சமூக மற்றும் விலங்கு ஆர்வலர்களிடம் இருந்து கடும் விமர்சனத்தையும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சர்ச்சைக்குரிய போட்டோஷூட்யை studio afzl என்ற போட்டோ நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது.
ஆனால் இந்த புகைப்படத்திற்கு கடும் விமர்சனங்களும், கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டதால், அதை தன் இன்ஸ்டகிராம் பக்கத்திலிருந்து நீக்கியது. ஆனால் இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இவ்வாறு வன விலங்கை மயக்கமடைய செய்து போட்டோ ஷூட் நடத்தியதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று JFK animal rescue and shelter என்ற விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை வைத்தனர். இதன் காரணமாக போட்டோ ஷூட் தடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கருதப்படுகிறது.