Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னது… கழுதைப்பால் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா…? திருப்பூரில் சூடுபிடிக்கும் கழுதை பால் விற்பனை..!!

திருப்பூரில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பதற்காக கழுதை பாலை பெற்றோர்கள் வாங்கி தங்களது குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர்.

இக்காலகட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுகிறது. இதனால் அடிக்கடி குழந்தைகளுக்கு சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக குழந்தைகளின் பெற்றோர்களும் கவலையாக காணப்படுகின்றனர்.

அக்காலத்தில் குழந்தைகளின் எதிர்ப்பு சக்திக்கு கழுதைப்பால் கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தற்போதுகாலகட்டத்தில் கழுதை பால் கொடுப்பது குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் தற்போது திருப்பூரில் இந்நிலையானது மாறியுள்ளது.

திருப்பூரில் உள்ள பல்லடம் ரோடு பகுதிகளில் பலர் கழுதை வளர்ப்பில் ஈடுபட்டு கழுதை பால் விற்பனை செய்து வருகின்றனர். இந்த ஒரு சங்கு கழுதை பாலின் விலையானது ரூபாய் ஐம்பதுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்தப் பாலை வாங்கி கொடுக்கின்றனர். இந்த கழுதை பால் விற்பனையும் நேற்று அமோகமாக நடந்துள்ளது.

Categories

Tech |