Categories
தேசிய செய்திகள்

என்னது!…. காற்று மாசால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறையுமா?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது. அதிக மாசு கொண்ட நாடுகளில் வங்காளதேசத்துக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த காற்று மாசுக்கு தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக பொது பொது முடக்கம் அமலில் இருந்தது.அப்போது பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கி நிலையிலும், நாட்டின் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்தே இருந்தது. இந்த காற்று மாசு கருவில் வளரும் சிசு தொடங்கி அனைவருக்கும் சுகாதார கேட்டை விலைக்கு விளைவிக்கிறது. இதே நிலை நீடித்தால் இந்தியர்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 ஆண்டுகள் வரை குறையும் என தெரிய வந்துள்ளது. அதனை தொடர்ந்து உலக அளவில் நிலவும் காற்று மாசு பார்த்தால், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் குறையும்.

இந்த காற்று மாசுவின் அதிக பாதிப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளில் தான் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டுக்கு பின் இந்தியாவில் சராசரி காற்று மாசு ஆண்டுக்கு 61.4% அதிகரித்துள்ளது. ஆனால் உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின் படி இந்தியாவின் டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் மாநிலங்களில் தான் மிக மோசமான காற்று மாசு பிரச்சனை உள்ளது. தற்போதைய நிலை தொடர்ந்தால் டெல்லி மக்களின் ஆயுட்காலம் 10.1 ஆண்டுகளும், பிரதேச மக்களின் ஆயுட்காலம் 8.9 ஆண்டுகளும், பிகார் மக்களின் ஆயுட்காலம் 7.9 ஆண்டுகளும் குறையும். எனவே காற்று மாசு காரணமாக சராசரியாக இந்தியர்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |