Categories
தேசிய செய்திகள்

என்னது சரக்கா!…. அந்த ஐடியா இருந்தா இந்த பக்கம் வராதிங்க…. முதல்வர் நிதிஷ்குமார் காட்டம்….!!!!

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருப்பதால், மாநிலத்தின் வருவாய் வெகுவாக பாதித்துள்ளதாக ஆளும் பாஜக எம்எல்ஏ எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் முதல்வர் நிதிஷ்குமார் மதுவிலக்கு சட்டத்தை அனைவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று மக்களிடம் நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேலும் பொது இடங்களில் குடித்தால் 7 ஆண்டுகளும், வீட்டில் குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் 5 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரசாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மாநிலத்திற்கு வருபவர்கள் கொஞ்சமாவது மது அருந்த அனுமதி கொடுங்கள் என்கிறார்கள். ஆனால் அது சாத்தியமா? அவர்கள் மது அருந்த அனுமதிப்போம் பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை மது அருந்த அனுமதிப்பீர்களா? எனக் கேட்டால் அப்படிப்பட்டவர்கள் பீகாருக்கு வராதீர்கள் என்பேன்.

மது அருந்துபவர்களுக்கு வர வேண்டிய தேவையில்லை. மாநிலத்திற்கு வெளியே மது அருந்திவிட்டு நுழைய விதிக்கப்பட்ட தடையையும் தளர்த்தும் எண்ணமில்லை. மதுவிலக்கு விதிப்பதற்கான எங்களது அரசின் முடிவு பெரிதும் பாராட்டப்பட்டது. ஒருவர் மது அருந்தினால் எவ்வளவு படித்தவராக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும், அவர்கள் திறமையானவர்களாக இருக்க முடியாது. அவர்கள் மகாத்மா காந்திக்கு எதிரானவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |