தமிழகத்தில் நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று இருந்தாலும் கூட சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் நேற்று உள்ளாட்சி அமைப்புகளான 21 மாநகராட்சிகள, 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புறங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான வாக்களிப்பு மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து சென்னையில் காலை 9 மணி வரையிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்து வந்த நிலையில், நேரம் செல்ல செல்ல சற்று விரைப்படைந்தது. இந்நிலையில் மாலை 5 மணி வரையிலும் 41.68% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு முடிவில் இது சற்று அதிகரிக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் 75 சதவீதத்துக்கு குறைவாகவே இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தல் மக்களவைத் தேர்தலாகவோ இல்லைசட்டமன்றத் தேர்தலாகவோ இருந்திருந்தால் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து இருப்பார்கள். ஆனால் இது உள்ளாட்சி தேர்தல் என்பதனாலேயே குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகி இருக்கிறது. சென்னையில் உள்ளாட்சி தேர்தல் என்றால் தங்களது வார்டுகளில் பெரிதாக எந்த வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது போன்ற பல்வேறு காரணங்களாலேயே வாக்குபதிவு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயகக் கடமை’ என்பதுனாலயே வயது முதியவர்கள் கூட ஆர்வமுடன் வாக்கு அளிக்கிறார்கள். ஆனால் படித்தவர்கள் பலர் இருக்கும் இந்த சென்னை நகரில் வாக்கு பதிவு சதவீதம் குறைவாக இருப்பது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்காக பல காரணங்கள் கூறப்பட்டாலும் தேர்தல் ஆணையத்தின் அலட்சிய போக்கே முக்கியமான காரணமாக கூறலாம்.
இந்நிலையில் 61 லட்சத்து 31 ஆயிரத்து 112 வாக்காளர்கள் உள்ள சென்னை நகரில் வெறும் 25 லட்சத்து 73 ஆயிரத்து 241 மட்டுமே வாக்களித்துள்ளனர். இதற்கு உதாரணமாக திரைப் பிரபலங்களில் நடிகர் விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட சிலர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இவர்களைத் தவிர சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களித்த பல பிரபலங்களின் முகங்களை இங்கு பார்க்க முடியவில்லை.
இதனை தொடர்ந்து சென்னையில் இருப்பவர்கள் பலர் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள். இவர்களுக்கெல்லாம் சொந்த ஊரில் ஒரு வாக்காளர் அட்டையும் சென்னையில் ஒரு வாக்காளர் அட்டையும் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் என்பதால் சொந்த ஊர்களில் அவர்களின் சொந்தக்காரர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர் என பலர் தேர்தல் களம் காண்பர். இதனால் அவர்களை எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று சென்னையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள். இவர்களுக்கான போக்குவரத்து செலவு மேலும் வாக்களிப்பதற்காக பணம் போன்றவைகளை வேட்பாளர்களை கொடுத்துவிடுகின்றனர். இதைத் தொடர்ந்து தேர்தல் நாளன்று விடுமுறை இதனை காரணமாக வைத்து சொந்த ஊருக்கு சென்று வந்த மாதிரியும் ஆகிவிடும் என்பதால் அனைவரும் அங்கு வாக்களிக்க சென்று விடுவார்கள். இதற்கு உதாரணமாக சைதாப்பேட்டையில் வாக்கு இருக்கும் ஒருவர் தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டத்திற்கு சென்று வாக்களித்திருக்கிறார்.
இதனை பற்றி அவர்கள் கூறியதாவது ‘சட்டமன்ற தேர்தல் என்றால் பரவாயில்லை இது உள்ளாட்சி தேர்தல் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் எங்கள் சொந்தகாரங்க நண்பர்கள் எல்லோரும் வார்டு மெம்பராக போட்டியிடுகிறார்கள் அவர்கள் எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் அதனால் தான் நங்கள் அங்கு செல்கிறோம்’ என்று கூறுகிறார்கள்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில் ‘ஒருவருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் போது அவர்களது பழைய அட்டையை நீக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் இது போன்று செய்வதில்லை. இவர்கள் அலட்சியதின் காரணமாக தான் இது போன்று வாக்கு சதவீதம் குறைந்து விடுகிறது. மேலும் ஒருவர் இரண்டு இடங்களில் கள்ள ஓட்டு போடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அதான் ‘மை’ வைக்கிறார்களே என்று சொல்லாதீர்கள். அது எல்லாம் ஈசியா அழைச்சிட்டு போய் ஓட்டு போட்டு விடுகிறார்கள்’ அவர்கள் தெரிவிக்கின்றனர்.