ஜாக்கிசான் ஏப்ரல் 7, 1954-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் பிறந்தார். இவர் சீன உள்நாட்டு போர் அகுதிகளான சார்லஸ் மற்றும் லீலீ சான் ஆகிய தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். ஜாக்கிசான் சிறந்த ஆக்ஷன் இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தற்காப்பு கலைஞர், பாடகர் மற்றும் சண்டை கலைஞர் ஆவார். ஜாக்கிஜான் 1962-ஆம் ஆண்டு “Little Fortunes” in the film Big and Little Wong Tin Bar என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜாக்கிசான் மிகச்சிறந்த நடிகர் ஆவார். சூதாட்டத்தில் ஈடுபடும் தாய்க்கும் பிறந்தவர் ஜாக்கிசான். இதனால் பள்ளியில் படிக்கும்போதே சக மாணவர்கள் ஜாக்கிசானை ஒதுக்கி வைத்துள்ளனர்.
இவர் குங்ஃபூ தற்காப்புக் கலையை மிகவும் வெறித்தனமாக கற்றுக்கொண்டார். பொதுவாக நடிகர்கள் மிகவும் கடினமான திரைப்பட காட்சிகளில் டூப் வைத்து எடுப்பது உண்டு. ஆனால் ஜாக்கிசான் தான் நடித்த திரைப்படங்களில் மிகவும் கடினமான சண்டை காட்சிகளில் டூப் வைக்காமல் அவரே நடித்துள்ளார். ஜாக்கிசான் தனது வாழ்வில் ஏழை எளிய மக்களுக்கு மிக பெரும் தியாகத்தை செய்துள்ளார். அதாவது, “நான் திரைப்படங்கள் மூலம் ஏராளமாக சம்பாதித்தாலும் அந்த பணம் எனது குழந்தைகளை சேராது. தினமும் ஒரு வேளை சாப்பாட்டுக்கு சிரமப்படும் கூலி தொழிலாளர்களுக்கு அது பயன்படும்” என ஜாக்கிசான் கூறியுள்ளார்.