இந்தியாவில் உலக அதிசயங்களில் ஒன்றான ‘தாஜ்மஹால்’ என்ற பெயரை ‘ராம் மஹால்’ என்று மாற்றம் செய்யப்படுவதாக பாஜக கட்சியின் எம்.எல்.ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உத்திரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்திலுள்ள பைரியா தொகுதியை சேர்ந்தவர் எம்.எல்.ஏ சுரேந்திர சிங் ,செய்தியாளர்களிடம் பேட்டி எடுத்தபோது ,உலக புகழ்பெற்ற தாஜ்மஹால் கடந்த காலத்தில் சிவன் கோயிலாக இருந்ததாகவும், இதன் காரணமா உத்திரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி அமைந்தால் ‘ராம் மஹால்’ என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று கூறினார். இதையடுத்து கடந்த மார்ச் 13ஆம் தேதி மொராதாபாத் பத்திரிக்கை துறையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் மீது சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் 20 கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கடுமையாகத் தாக்கப்பட்டதில் ,சிலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவமானது பத்திரிக்கையாளர்கள் மீது வன்முறையை உபயோகிக்கும், சமாஜ்வாதி கட்சியின் உண்மை பிரதிபலிப்பை காட்டுகிறது என்று கூறினார் .இவ்வாறு யோகி ஜி ஆட்சியின் தலைமையின் நடைபெறாது, என்று கூறியுள்ளார். அவர் குறிப்பிடுகையில் இந்தியாவின் பெருமையைப் பற்றி பேசுவார்கள் மட்டுமே இந்திய நாட்டின் தலைவராக இருக்க முடியும் என்றும், பாஜக தலைவர்கள் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசுவது ஒன்றும் புதிதல்ல என்று கூறினார்.