பரிச்சை எழுதி ஒருவர் தோல்வியடைந்து தோல்வியடைந்த வேர்ல்ட் ரெக்கார்டு செய்துள்ளார் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.. அவரைப் பற்றிதான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.
இந்த உலகில் பலரும் பல விதமான, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று சாகசங்களை செய்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒருவர் பரிட்சையில் பெயிலாகி வேர்ல்ட் ரெகார்ட் செய்துள்ளார். நம் நாட்டில் எல்லாம் டிரைவிங் லைசென்ஸ் வாங்க வேண்டுமென்றால் முறையாக எட்டு போட்டு காண்பித்தால் போதுமானது. ஆனால் சவுத் கொரியா நாட்டில் எட்டு போடுவது மட்டுமல்லாமல் டிரைவிங் மற்றும் சாலை விதிமுறைகள் தொடர்பாக பரீட்சையும் எழுதவேண்டும். இந்த பரிட்சையில் தோல்வி அடைந்து தான் ஒருவர் வேர்ல்ட் ரெகார்ட் செய்துள்ளார்.
சவுத் கொரியா நாட்டை சேர்ந்த சாச்சா சு என்பவர் டிரைவிங் கற்றுக் கொண்டுள்ளார். இவர் டிரைவிங் மிகவும் விரைவாக கற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் டிரைவிங் தொடர்பாக எழுத்து தேர்வு எழுதும் பொழுது அதில் தோல்வியடைந்துள்ளார். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே டிரைவிங் லைசென்ஸ் வாங்க முடியும். அதனால் இந்த நபர் எப்படியாவது டிரைவிங் லைசென்ஸ் வாங்கி விட வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பரிட்சை எழுதி வந்துள்ளார், ஆனால் மறுபடியும் மறுபடியும் அவள் பரீட்சையில் தோல்வி அடைந்து வந்துள்ளார். இது போன்று அந்த பெண்மணி நான்கு வருடத்தில் 950 முறை பரீட்சை எழுதி 950 முறையும் தோல்வியடைந்துள்ளார். கடைசியாக 951 போது வெற்றிகரமாக பாஸ் செய்துவிட்டார். இதற்காக அந்த பெண்மணிக்கு கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. இந்தப் பெண்மணி தொடர்ந்து பரிட்சையில் தோல்வி அடைந்ததை பார்த்த வேர்ல்டு ரெக்கார்டு அதிக முறை பரிட்சையில் தோல்வியை சந்தித்த நபர் என்ற வேர்ல்ட் ரெக்கார்டை கொடுத்துவிட்டனர்.